சீனா முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் மறைவு

பீஜிங்: சீன முன்னாள் அதிபர் ஜியாங்க்கு ரத்தப் புற்றுநோய் மற்றும்  உறுப்புகள் செயலிழப்பால் நேற்று மரணமடைந்தார் என்று சீன தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.  96 வயதான  ஜியாங் ஜெமின் ஷாங்காய் நகரில் வசித்து வந்தார். கடந்த 1989ம் ஆண்டில் தியனன்மென் சதுக்கத்தில்  ஜனநாயகம் கோரி நடந்த மாணவர்கள் போராட்டத்தை சீன அரசு ஒடுக்கிய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இதன் பின்னர் ஜியாங் ஜெமின் 1993ல் அதிபராக பதவி ஏற்றார். 2003 வரை  பதவி வகித்த இவரது ஆட்சி காலத்தில் மார்க்கெட் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தப்பட்டது. 1997ம் ஆண்டு இங்கிலாந்து வசம் இருந்த  ஹாங்காங் சீனாவிடம்  ஒப்படைக்கப்பட்டது. உலக வர்த்தக அமைப்பிலும் சீனா இணைந்தது உள்பட பல முக்கிய நிகழ்வுகள் நடந்தன.

Related Stories: