அமலாக்கத்துறை முன்பு விஜய் தேவரகொண்டா ஆஜர்

ஐதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா உள்பட சிலர் மீது தொடரப்பட்ட வழக்கு அடிப்படையில், ஐதராபாத்தில் இருக்கும் அமலாக்க இயக்குனரகம் முன்பு நேற்று விஜய் தேவரகொண்டா ஆஜரானார்.தெலுங்கு இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் புரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் நடிகை சார்மி கவுர் ஆகியோர், ‘லைகர்’ படம் தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை (ஃபெமா) மீறியதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக மேற்கண்ட நபர்கள் மீது அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பக்கா ஜட்சன் அளித்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில், மேற்கண்ட வழக்கு தொடர்பாக விஜய் தேவரகொண்டா ஐதராபாத் அமலாக்க இயக்குனரக அலுவலகம் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அந்நிய செலாவணி மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

Related Stories: