தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் வி.என்.ஜானகிக்கு முழுஉருவ வெண்கல சிலை: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்ஜிஆரின் மனைவியும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மறைந்த வி.என்.ஜானகியின் 100-வது பிறந்தநாள் விழா தொடக்கத்தினையொட்டி அவருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்  என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்ஜிஆர் மாளிகையில் தரை தளத்தில் உள்ள முக்கிய பிரமுகர் அறைக்கு வி.என்.ஜானகி அம்மையார் பெயர் சூட்ட வேண்டுமென்றும், முதல் தளத்தில் உள்ள கூட்ட அறைக்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் என்னிடம் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. மேலும், சென்னை, தி.நகர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில், உரிய அனுமதி பெற்று, எம்ஜிஆர் மற்றும் அவரது மனைவி வி.என். ஜானகிக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: