தறிபட்டறை தொழிலாளி கொலை: 4 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள்

ஈரோடு: தறிபட்டறை தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு பெரியசேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகர் 8வது வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (25). தறிபட்டறை தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செல்வகுமாரின் பெரியப்பா மகன் மணிகண்டன் அதே பகுதியில் அவரது மனைவி லட்சுமியுடன் (27) வசித்து வருகிறார். மணிகண்டனுக்கும், லட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 2018 ஆகஸ்ட் 9ம் தேதி படுகொலை செய்யப்ட்டார். இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி உட்பட 8 பேரை கைது செய்தனர். இதில் கண்ணையன் இறந்துவிட்டார். இந்த வழக்கை ஈரோடு முதலாவது ஜூடிசியல் கோர்ட் நீதிபதி மாலதி விசாரித்து, ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, பாப்பம்மாள் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories: