தண்டையார்பேட்டை சீதாராம் நகர் மயான பூமி பராமரிப்பு பணி காரணமாக மூடல்

சென்னை: தண்டையார்பேட்டை சீதாராம் நகர் மயான பூமியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், பொதுமக்கள் முல்லை நகர் தகன எரிவாயு மேடையை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெறும் 01.12.2022 முதல் 31.01.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் வார்டு-37க்குட்பட்ட முல்லை நகர் தகன எரிவாயு மேடையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: