பாக். புதிய ராணுவ தளபதி ஆசிம் முனிர் பதவியேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஆசிம் முனிர் நேற்று பதவியேற்றுக்கொண்டார். பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதியாக  முன்னாள் ஐஎஸ்ஐ உளவுப்பிரிவு தலைவரான ஆசிம் முனீரை அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடந்த 24ம் தேதி  நியமித்தார். ஏற்கனவே ராணுவ தளபதியாக இருந்த குவாமர் ஜாவீத் பஜ்வானின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைதொடர்ந்து நேற்று புதிய ராணுவ தளபதி பதவியேற்பு விழா இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.

அப்போது, பாகிஸ்தானின் 17வது ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய ராணுவ தளபதி ஆசிம் முனீர் கடந்த 2017ம் ஆண்டு ராணுவ உளவுப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 2018ம் ஆண்டு அக்டோபரில் ஐஎஸ்ஐ உளவுப்பிரிவின் தலைவரானார். ஆனால் அப்போதைய பிரதமர் இம்ரான்கானின் வற்புறுத்தலின்பேரில் குறுகிய காலத்திலேயே அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

Related Stories: