இந்தியாவுடன் விரைவில் தடையற்ற வர்த்தகம்; இங்கிலாந்து பிரதமர் சுனக் அறிவிப்பு

லண்டன்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வர்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா, இங்கிலாந்து இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார். இந்தியா - இங்கிலாந்து இடையே இந்த தீபாவளிக்கு முன்பாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இருதரப்பிலும் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு எட்டப்பட்டது. ஆனால், சில பிரிவுகளில் முரண்பாடு ஏற்பட்டதால், ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி ஏற்பட்டது.

இந்நிலையில், பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக இங்கிலாந்தின் வெளியுறவு கொள்கை குறித்து நேற்று  பேசிய ரிஷி சுனக், `` இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வர்த்தக உறவை வலுப்படுத்த இங்கிலாந்து-இந்தியா இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். வரும் 2050-ம் ஆண்டில் உலகப் பொருளாதார தேவையில் 50 சதவீதத்தை இந்தோ-பசிபிக் பிராந்தியம் பூர்த்தி செய்யும். இதேபோல், இந்தோனேசியாவுடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும்,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: