மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் சிறையிலடைப்பு

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தலைச்சங்காடு கரைமேட்டில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 104 மாணவ, மாணவிகள்  படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக சாமுவேல் செல்லதுரை(54) பணியாற்றி வருகிறார். இங்கு பயிலும் 8ம் வகுப்பு மாணவிகள் 4 பேருக்கு தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், சீர்காழி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரையை கைது செய்தனர். பின்னர் நேற்றுமாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர்.

Related Stories: