போதை ஒழிப்பு விழிப்புணர்வு; தளபதி கே. விநாயகம் மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் மாவட்ட காவல்துறை சார்பில்,திருவள்ளூரில் விழிப்புணர்வு கருத்தரங்கம், கண்காட்சி நடத்தப்பட்டது. மாவட்ட எஸ்பி. பா.சிபாஸ் கல்யாண், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஏ.எஸ்.பி., விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கலெக்டர்  ஆல்பி ஜான் வர்கீஸ், போதை பொருட்களுக்கு எதிரான மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சியை துவக்கிவைத்து பார்வையிட்டார்.

இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதிலிருந்து விடுபடுவது குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் தங்களது பேச்சு, நடிப்பு வடிவிலான போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வு கருத்தரங்கில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருத்தணி தளபதி கே விநாயகம் மகளிர் கலைக் கல்லூரி கல்விக் குழுமம் சார்பில், பங்கேற்ற இளங்கலை மாணவிகள் பாட்டு போட்டி, நடன போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

இதையடுத்து சாதனை படைத்த மாணவிகள் 60 பேர், தளபதி கே விநாயகம் கல்விக் குழுமத்தின் தலைவரும் தாளாளருமான பாலாஜி, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.வேதநாயகி, துணை முதல்வர் முனைவர் பொற்செல்வி மற்றும் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்களை  ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.

Related Stories: