பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில் மினி மாரத்தான் ஓட்டம்-அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மினி மாரத்தான் ஓட்டத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று) கொடியசைத்து துவக்கி வைத்தார்.பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக நேற்று மினிமாரத்தான் ஓட்டப்பந்தயம் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் கலெக்டர் கவிதாராமு, முன்னிலையில், அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது:பொது சுகாதாரத்துறை 1922-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவினையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட பகுதியிலும், உலக சாதனை ஏற்படுத்தம் நிகழ்வாக ஒரேநாளில் நடைபெற்றது.

இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில், பல்வேறு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுசுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 1000 பேர் பங்கேற்று, புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் துவங்கி, பழைய பேருந்துநிலையம், அண்ணாசிலை, பிருந்தாவனம், பழனியப்பா கார்னர், திலகர் திடல், பால்பண்ணை கார்னர், வழியாக 5 கிலோ மீட்டர் தூரத்தில், புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது. இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை, மாவட்ட கலெக்டர் வழங்கினார் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ் (புதுக்கோட்டை), கலைவாணி (அறந்தாங்கி), மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமரன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: