ஜி.கே.வாசன் தலைமையில் தமாகாவின் செயற்குழு கூட்டம்; சீர்காழியில் மழையால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு: 13 தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தமாகாவின் 9ம் ஆண்டு துவக்க விழா, செயற்குழு கூட்டத்தில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமாகாவின் 9ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சிறப்பு செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மறைந்த கட்சி பிரமுகர்களுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில், கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு தமிழகத்தில் மீண்டும் பிரிவினைவாத சக்திகள் தலைதூக்கி வன்முறை, கலாச்சாரம், ஏற்படுவதை தடுக்க குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். தேசிய பேரிடர் மாவட்டமாக மயிலாடுதுறை அறிவித்து தொடர்பு பணிய உடனடியாக மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். போதைப்பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையை திமுக தலைமையிலான கட்சிகள் தியாகிகள் போல் சித்தரித்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு இது போன்ற சட்ட விரோத செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன நீட்தேர்வு ரத்து, கல்வி கடன் தள்ளுபடி, விவசாய நகை கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு நிறைவேற்றாமல் உள்ளனர். அவற்றை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், முன்னாள் எம்பிக்கள்  பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், நாட்ராயன், ஈரோடு ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏக்கள்  விடியல் சேகர், டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், பொதுச் செயலாளர்கள் சக்தி  வடிவேல், ராஜம் எம்பி நாதன், வி.பி.ஜவஹர் பாபு, காஞ்சி வடக்கு மாவட்ட  தலைவர் வி.என்.வேணுகோபால், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், சி.பிஜூ,  வேணுகோபால், சத்தியநாராயணன், அருண்குமார், மாவட்ட நிர்வாகிகள்  சி.கே.மூர்த்தி, துரைவேலு முதலியார், பொன்ராஜ், லோக சுப்ரமணியம்,  சீதாராமன், ரவிக்குமார், ராஜகோபால், மோகனகிருஷ்ணன் சுகுணா மணி, சுகுணா மணி,  தசரதன், மேகநாதன், கோவிந்தராஜன், நிர்வாகிகள் பத்மநாபன், கே.ஆர்.டி.ரமஷே்,  முன்னாள் சேர்மன் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: