தேன்கனிக்கோட்டை அருகே சிக்கன் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் சாவு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா லக்கம்பட்டியை சேர்ந்த தீர்த்தகிரி மகன் அருண்குமார்(24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி, பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம், வீட்டில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில், அருண்குமாருக்கு வாந்தி ஏற்பட்டு, மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: