பிரேசிலில் 2 பள்ளிகளில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி: முன்னாள் மாணவன் வெறிச்செயல்

அராகிரஸ்:  பிரேசிலில் 2 பள்ளிகளில் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் காயமடைந்தனர். பிரேசிலின் எஸ்பிரிட்டோ சான்டோ மாகாணத்தில் 16வயதான மாணவன் தான் படித்த முன்னாள் பள்ளிக்கு துப்பாக்கியுடன் காரில் சென்றுள்ளான். பள்ளிக்குள் நுழைந்த மாணவன் அங்கிருந்த ஆசிரியர்களை பார்த்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான். இதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 9  பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து மற்றொரு பள்ளிக்கு சென்ற அந்த மாணவன் அங்கிருந்தவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஒரு பெண் உயிரிழந்தார்.

மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் முதலில் துப்பாக்கி சூடு நடத்திய பள்ளியில் தான் கடந்த ஜூன் மாதம் வரை படித்து வந்துள்ளான். அதன் பின்னர் தான் மற்றொரு பள்ளிக்கு பெற்றோர் அவனை மாற்றியுள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மாணவனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: