பிரேசில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

பிரேசிலியா: பிரேசில் நாட்டின் எஸ்பிரிடோ சண்டோ மாகாணம் விக்டோரியா நகரத்தின் ஆர்க்ரூஸ் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இப்பள்ளிக்கு மாணவர்கள் நேற்று வழக்கம் போல் வந்தனர். காலை 10 மணி அளவில் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் வந்த ஒருவர், பள்ளி வளாகத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். அதேபோல் அருகில் இருந்த மற்றொரு பள்ளிக்கூடம் மீதும் தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். துப்பாக்கி சூடு நடத்தியது 17 வயது சிறுவன் என்பதால், அவனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: