தாம்பரம் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 3 வடமாநில சிறுவர்கள் கைது: காவல் ஆணையர் அமல்ராஜ் விளக்கம்

சென்னை: தாம்பரம் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 3 வடமாநில சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல் ஆணையர் அமல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். கொள்ளைபோனதாக காலை 6 மணிக்கு தகவல் கிடைத்த நிலையில், காலை 8.30க்கு கொள்ளையர்கள் சிக்கினர். லிப்ட் துவாரம் வழியாக சென்று மேல் கதவை உடைத்து நகைக் கடை உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடித்து வீட்டில் வைத்திருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்று காவல் ஆணையர் கூறினார்.

Related Stories: