தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளை

சென்னை: தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளையடித்துள்ளனர். சோலையூர்-வேளச்சேரி சாலையில் பிரபல நகைக்கடையில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம் குறைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகைக்கடையை மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கி உள்ளனர்.

தற்போது கடை காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டு இரவு 9 மணி அளவில் கடையில் விற்பனை நடைபெறும். கொள்ளை சம்பவம் காலை 4.35 மணியளவில் நடைபெற்றுள்ளது. மர்மநபர்கள் உள்ளே நுழைந்த தகவல் நகைக்கடையின் உரிமையாளர் செல்போன் மூலம் தெரியவந்துள்ளது. மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் திருடப்பட்டன. லாக்கரை திறக்க முயற்சி செய்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய காவலாளிக்கு தகவல் கூறியுள்ளார்.

உடனே ஊழியர்களை வரவழைத்து கடையின் ஷட்டரை திறந்து பார்த்துவிட்டு கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கைரேகை மற்றும் தடவியர் நிபுணர்களை வரவழைத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: