ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் ட்ராக் கேடி செயலி: டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகப்படுத்தினார்

சென்னை: ரவுடிகளின் குற்றப்பதிவு செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் ட்ராக் கேடி செயலியை டிஜிபி சைலேந்திர பாபு  நேற்று அறிமுகப்படுத்தினார்.  ட்ராக் கேடி செயலியின் முதன்மை நோக்கம் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்குவதாகும். இதன் மூலம் மாதம்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் நேரடி கண்காணிப்பை உறுதி செய்யவும் முடியும்.

இந்த செயலில் 39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30 ஆயித்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திரப்பதிவேடுகள் டிஜிட்டல்  மயமாக்கப்பட்டுள்ளன. ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான குழு ரவுடிகளின் குற்றப்பதிவு செயல்பாடுகளை கண்காணிக்க ட்ராக் கேடி என்ற இச்செயலியை உருவாக்கியுள்ளது. 

Related Stories: