டெல்லியில் புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் பெண்களுக்கு தடை: கவர்னர் வேண்டுகோளை ஏற்று உடனடி வாபஸ்

புதுடெல்லி: டெல்லி ஜூம்மா மசூதியில் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபடுவதற்கு தடை இல்லை என்று மசூதி இமாம் தெரிவித்தார். டெல்லியில் மிகவும் புகழ்பெற்ற ஜூம்மா மசூதி இருக்கிறது. இது வழிபாட்டு தலமாகவும் பழமை வாய்ந்த சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. தொழுக்கைக்காக பக்தர்களும், பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வருகிறன்றனர். இந்நிலையில் மசூதிக்குள் பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ வர அனுமதி இல்லை என்று மசூதியின் பிரதான நுழைவு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

மேலும் ஆண்கள் துணை இல்லாமல் பெண்களோ அல்லது சிறுமிகளோ மசூதிக்குள் வர அனுமதி இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு கண்டனங்கள் எழுந்தது.  இந்த தடையை வாபஸ் பெறுமாறு ஜாகி இமாம் புகாரிக்கு கவர்னர் சக்சேனா நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுதொடர்பாக இமாம் கூறுகையில்,’ கவர்னர் என்னிடம் பேசினார். இதையடுத்து நோட்டீஸ் போர்டில் இருந்த தடை அறிவிப்பை நீக்க விட்டோம். ஆனால் மசூதிக்குள் வரும் அனைவரும் புனித தன்மையை காப்பாற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: