கொத்தகம் கிராமத்தில் மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் களை எடுக்கும் பணி மும்முரம்

கந்தர்வகோட்டை : கொத்தகம் கிராமத்தில் மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் களையெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள கொத்தகம் கிராமத்தில் மரவள்ளிகிழங்கு பதியம் செய்து உள்ளனர். இதன் விபரம் தோட்ட உரிமையளர் ராமேஷிடம் கேட்டபோது, மரவள்ளிகிழங்கு சாகுபடியில் கிழங்கு குச்சி பதியம் செய்யும்போது இரண்டு அடிக்கு ஒரு பதியம் என செய்ய வேண்டும் எனவும், தண்ணீர் பாய்ச்சும் பணி சரியான முறையில் இருந்தால் தண்ணீர் வீண் அகாமல் இருக்கும் மேலும் கிழங்கு பயிர்க்கு களை வெட்டுவது சுலபமாக இருக்கும் பூமிக்கு அடியில் உள்ள மரவள்ளி கிழங்கு சரியான இடைவெளியில் குச்சி பதியம் இருந்தால் கிழங்கு நீண்ட வளர்ச்சியும், கிழங்கு பருமனுடனும் இருக்கும் இதானல் மரவள்ளிக்கிழங்கு மகசூல் கூடுதாலக கிடைக்கும்.

மரவள்ளிகிழங்கு ஆண்டு பயிர் என்பாதல் பராமரிப்பு செலவு சற்று குறைவாக இருக்கும் களை முறையாக வெட்டி, தண்ணீர் பாய்ச்சி வந்தால் நாம் எதிர்பார்க்கும் மகசூல்பெறலாம் என தெரிவித்கிறர். மரவள்ளிகிழங்கு விற்பனை என்பது சுலபமாக செய்துவிடலாம் என்று கூறினார்.

Related Stories: