நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை; முதலமைச்சருக்கு கோரிக்கை

கடலூர்: கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாக ரீதியாக மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மாற்றத்தால், அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் அக்டோபர் மாத ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் தமிழகமெங்கும் புதிய நிர்வாக மாற்றத்திற்கு உட்பட்ட பல்வேறு கல்வி மாவட்டத்தை சார்ந்த ஆசிரியர்கள் பெரிதும்

பாதிப்படைந்துள்ளனர்.

இது குறித்து விரைவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கடந்த 17ம் தேதி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை

அனுப்பியிருந்தார். இருப்பினும் இந்தப் பணிக்கு பயன்படுத்தி வரும் மென்பொருள் பிரச்சனையால் தாமதம் ஏற்படுவதாக மாவட்டக் கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மென்பொருளை தவிர்த்து நேரடியாக ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: