* நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், விக்கெட் கீப்பர்/அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஆண்டு இறுதி ஏடிபி ஒற்றையர் தரவரிசையில் முதல் முறையாக ஸ்பெயின் வீரர்கள் கார்லோஸ் அல்கராஸ், ரபேல் நடால் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.