பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வடமாநில வியாபாரி கைது

சென்னை: வடமாநில கஞ்சா வியாபாரி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு படி “போதையில்லா தமிழகம்” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதைஒழிப்பு நடவடிக்கையாக இன்று, 21.11.2022-ம் தேதி அம்பத்துர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் G. கார்த்திக் என்பவருக்கு கிடைத்த தகவலின் பேரில். அம்பத்துர் மாதனாங்குப்பம் ரோடு பார்க் அருகில், கஞ்சா எனும் போதை பொருளை விற்றுக்கொண்டு இருந்த நபரான ஐசக் நியூம் ஆ/வ 22, த/பெ ஹியூலங்சங் நிகியே கிராமம், கிஷின்ங்ராம் பெரன் மாவட்டம், நாகாலந்து மாநிலம் என்பவர். சுமார் 12 கிலோ கஞ்சாவுடன் பிடித்து கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொள்ளப்பட்டது.

எதிரி ஐசக் நியூம் என்பவர்  மேற்படி கஞ்சாவை நிகிடேபாகிராம் பெரன் மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்து அம்பத்துர் மற்றும் அம்பத்துர் எஸ்டேட் மாதனாங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுரி மாணவர்களுக்கும் வட மாநில இளைஞர்களுக்கும் சிறு சிறு பொட்டளங்களாக விற்பனை செய்து வருவதாகவும் விசாரனையில் தெரிய வந்தது. மேற்படி எதிரி ஐசக் நியூமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ரகசிய தகவல் முலம் வடமாநில கஞ்சா விற்பனையாளரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட அம்பத்துர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் G. கார்த்திக் மற்றும் தனிப்படையினரை ஆவடி காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்.

Related Stories: