செவிலியரை தாக்கியதாக பெண் மருத்துவர் மீது புகார்

அண்ணாநகர்: வடபழனியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (55). அமைந்தகரையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: அமைந்தகரை பகுதியில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன்.

இங்கு, மருத்துவராக பணியாற்றும் சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி (47) என்பவர், நான் சரியாக வேலை செய்யவில்லை என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென என்னை தாக்கினார். எனவே மருத்துவர் ஜோதிலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post செவிலியரை தாக்கியதாக பெண் மருத்துவர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: