திருப்பதியில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின மாவீரர்களுக்கு அஞ்சலி-விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பதி : திருப்பதியில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின மாவீரர்களுக்கு அஞ்சலி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.திருப்பதியில் பழங்குடியினர் கவுரவ தின விழா-2022 முன்னிட்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின மாவீரர்களை கவுரவிக்கும் வகையில், மாநில எஸ்டி ஆணைய உறுப்பினர்  சங்கர் நாயக் தலைமையில்  அஞ்சலி மற்றும் விழிப்புணர்வு பேரணி எம்.ஆர். பள்ளி ஜங்ஷன் பகுதியில் நேற்று நடைபெற்றது.

பேரணியை தொடங்கி வைத்து சங்கர் நாயக் பேசியதாவது: ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் உதத்தரவின் பேரில், எங்கள் மாநிலத்தில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். ஜார்க்கண்ட் மாநிலத்தின் பகவான் பிர்சா முண்டா, சித்து-கன்ஹு, மத்தியப் பிரதேசத்தின் தந்தியா பில், பீமா நாயக், ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு, மணிப்பூரின் ராணி கெய்டின்லியு, ஒடிசாவின் சஹீத் லக்ஷ்மண் நாயக் போன்ற பல பழங்குடி ஜாம்பவான்களை நினைவுகூர்வது நமது கடமை’ என்று கூறினார்.

பின்னர், மாவட்ட வருவாய் அதிகாரி சீனிவாச ராவ் கூறுகையில் ‘ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவாவின் ஒரு பகுதியாக நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின பிரபுக்களை பழங்குடியினரின் மரியாதை நாள் விழா-2022 இல் நினைவுகூர வேண்டும்.

அதேபோல சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை, பிளாஸ்டிக் தடை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் அப்போதுதான் மாநிலம் ஆரோக்கியமாக இருக்கும்’ என்றார்.நிகழ்ச்சியில் பழங்குடியினர் விடுதி அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள் ஹேமலதா, பிரசுனா, ரத்னபிரபா, ஜெயந்தி, பிரதிபா உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: