குஜராத் பாலம் விபத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட பழமையான தொங்கு பாலம் கடந்த மாதம் 30ம் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் பலியாயினர். பாலத்தை முறையாக பராமரிக்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக் காரணம் என வக்கீல் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மனுவில் வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்படுவதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குஜராத் உயர் நீதிமன்றம் ஏற்கனவே தாமாக முன்வந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: