விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே பதவி புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் உள்ளார். தலைமை தேர்தல் ஆணையருக்கு உதவியாக எப்போதும் 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவது உண்டு. தற்போது, அனுப் சந்திர பாண்டே மட்டுமே தேர்தல் ஆணையராக இருக்கிறார். மற்றொரு பதவி காலியாக இருந்தது. இந்நிலையில்,  காலியாக உள்ள இந்த பதவிக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி முர்மு நேற்றிரவு வெளியிட்டார். ஒன்றிய கனரக தொழில்துறை செயலாளராக இருந்த அருண் கோயல், வரும்  டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெற இருந்தார். ஆனால், நேற்று முன்தினம் அவர் திடீரென விருப்ப ஓய்வு பெற்றார். மறுநாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர், 1985ம் ஆண்டை பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர்.  

* 2025ல் தலைமை தேர்தல் ஆணையர்

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், 2025ம் ஆண்டு பிப்ரவரியில் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையராகும் வாய்ப்பு, அருண் கோயலுக்கு உள்ளது.

Related Stories: