மின்வசதி இல்லாமல் 1 கோடி பேர் தவிப்பு: உக்ரைன் அதிபர் கவலை

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், உக்ரைனின் முக்கிய நகரங்களான ஒடெசா, வின்னிட்சியா, சுமி, கீவ் ஆகியன மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்விநியோகம் இல்லாத பகுதியில் மட்டும் மக்கள் இருளில் மூழ்கி உள்ளனர்.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பில், ‘ரஷ்யப் படைகளின் புதிய தாக்குதல்களால் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மின்சாரம் இல்லை. உக்ரைன் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பை ரஷ்யப் படைகள் முடக்கி உள்ளன. தற்போது 10 மில்லியனுக்கும் (ஒரு கோடி) அதிகமான உக்ரைன் மக்கள் மின்சார வசதி இல்லாமல் கடும் பாதிப்பில் உள்ளனர். குறிப்பாக கீவ், ஒடெசா, வின்னிட்சியா, சுமி உள்ளிட்ட நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: