பண மோசடி வழக்கு அமைச்சர் சத்யேந்தர் ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2017 ம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 10 பேர் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பணபறிமாற்றம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை சிறப்பு நீதிபதி விகாஸ் துல் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் மற்றும் அமலாக்கத்துறை வாதங்களை கேட்ட நீதிபதி, சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Related Stories: