ஏழை மக்கள் பயனடையும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

சென்னை: சென்னை பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில், 69வது கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பதிவாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில், அமைச்சர்கள்  மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, நிதியுதவிகளை வழங்கினர். பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத் துறை சார்பில் வழங்கப்பட்ட நகை கடனை தள்ளுபடி செய்தார். அதேபோல் மகளிர் சுயஉதவி குழுவிற்கு வழங்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்யவும் உத்தரவிட்டார். கூட்டுறவு துறைக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்து வருகிறார். இதன்மூலம், மகளிர் சுயஉதவி குழுக்களும், ஏழை மக்களும் பெரிதும் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: