துபாய் சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவரை நெகிழச் செய்த தமிழக தொழிலதிபர்

துபாய்: சமீபத்தில் தமிழக அரசு சார்பில் 68 அரசு பள்ளி மாணவ மாணவியர் துபாய்க்கு கல்வியை சுற்றுலா சென்றனர். சுற்றுலாவின் போது அறுசுவை உணவுடன் கூடிய நட்சத்திர கப்பலில் அபுதாபி பகுதி கடலில் சென்றனர். சுற்றுலா சென்ற மாணவ மாணவியர்களில் அரவிந்த் என்ற மாணவருக்கு பிறந்தநாள் என்ற விவரம் தமிழகத்தை சேர்ந்த அமீரக தொழிலதிபர் சாகுல் ஹமீது அவர்களுக்கு தெரிய வந்தது.

இதனை எடுத்து நம் மாணவருக்கு தெரியாமல் இன்ப அதிர்ச்சியாக நட்சத்திர கப்பலில் பிறந்தநாள் விழா கேக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த ஏற்பாடுகள் மாணவருக்கு தெரிவிக்கப்பட்டு அரவிந்த் என்ற அந்த மாணவனுக்கு பிறந்தநாள் விழா கேக் வெட்டிக் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த மாணவன் கேக்கை வெட்டிக்  தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும், தொழிலதிபர் நோபல் குழுமத்தின் தலைவர் சாகுல் ஹமீது அவர்களுக்கும் கேக்கினை  ஊட்டி அன்பைப் பரிமாறினார்.

இது குறித்து அந்த மாணவர் கூறுகையில் என்னுடைய வாழ்க்கையில் எத்தனை பிறந்தநாள் வாந்தாலும் இந்த பிறந்தநாளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்ற கூறிய விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாணவனுக்கே தெரியாமல் பிறந்த நாள் ஏற்பாடு செய்த தொழிலதிபர் சாகுல் ஹமீது அவர்களுக்கு அந்த மாணவன் நெகிழ்வுடன்  நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

நல்லோர் சூழ் உலகு என்ற சொல்லுக்கேற்ப மாணவச் செல்வங்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைத்து தந்த நோபல் குழுமத்தின் தலைவர் சாகுல் ஹமீது அவர்களுக்கும் அதீப் குழுமத்தின் தலைவர் அன்சாரி அண்ணன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்து மாணவச் செல்வங்களும் ஆசிரியர்களும் விடைப் பெற்றார்கள்.

Related Stories: