தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வடகிழக்கு பருவமழைக்கு பாதிப்பில்லாத நன்னிலம்: விவசாயிகள் மகிழ்ச்சி

நன்னிலம்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வடகிழக்கு பருவமழைக்கு நன்னிலம் பகுதியில் பாதிப்பு ஏதும் இல்லை. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக, வடகிழக்கு பருவமழையின், தீவிரத்தால், வழக்கத்திற்கு அதிகமாக, கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசின், பொதுப்பணித்துறை கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை, தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆறுகளை, தூர்வாரி, கரைகளை பலப்படுத்திய நிலையில், ஏ பிரிவு மற்றும் பி பிரிவு பாசன வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள், தூர்வாரியதால், சமீப காலமாக பெய்து வரும் கனமழையால், பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில், விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பள்ளமான இடங்களில் அமைந்துள்ள, விளைநிலங்களின் பயிர்கள், மழை நீரில் மூழ்கி, மெல்ல மழைநீர் வடிய, தொடங்கிய நிலையில், மழை நீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க, வேளாண்மை துறையின் விரிவாக்கம் மையங்கள், பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து, விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்கள் தந்து வருகின்றனர். மேலும் வடகிழக்கு பருவமழை, விவசாயத்தை பாதிக்கும் என்ற நிலையில், தமிழக அரசு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெற, கால நீட்டிப்பையும் செய்துள்ளனர். இது விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கும், பாதிப்புகளை கணக்கீடு செய்வதற்கும், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு, தமிழக அரசு வழிகாட்டுதல் தந்துள்ளது. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள், ஆர்டிஓக்கள், மாவட்ட வருவாய் நிர்வாகம், பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு, மழை நீர் பாதிப்புகளை உடனுக்குடன் அறிந்து, அதற்கு ஏற்ப உடனடி தீர்வுகளை காண, வழிவகை காணப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை, பருவமழை துவங்குவதற்கு முன்பே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள், ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகள், மழை வெள்ளம், ஊருக்கு புகுவதற்கு ஏற்ற இடங்கள், ஆற்றுக் கறைகளில் உடைப்பு ஏற்படும் இடங்கள், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் அசாதாரண சூழ்நிலையை, எளிதில் கையாளும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பெரும் கனமழை பெய்தால், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் கொண்டு வைக்க, பாதுகாப்பு முகாம்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில், பொது மக்களிடம் நோய் தொற்று ஏற்படாத வகையில், பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கை, பொது சுகாதார துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ள காலங்களில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதற்கான விழிப்புணர்வுகளை பொது சுகாதாரத்துறை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில், மக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வுகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் பல்வேறு கட்டங்களாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வட கிழக்கு பருவ மழையின், கோரத்தாண்டவத்தால், பொதுமக்கள் விவசாயிகளும், பெரிதும் பாதிப்பு அடைந்து உள்ளார்கள். தற்போது தமிழக அரசு வடகிழக்கு பருவ பருவமழையில் கிடைக்கும் மழை நீரை நிலத்தடி நீராக மாற்றுவதற்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மழை வெள்ளங்கள் ஊருக்குள் போகாமல், குளம் குட்டைகள் ஏரிகளில் கொண்டு சேர்ப்பதற்கான வாய்க்கால்கள், சீரமைக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம், சாலையில் தேங்காதவாறு உடன் வடிவதற்கான வடிகால் வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஒரு சில இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், பெரும்பாலான இடங்கள் பாதிப்பில்லாமல், குடியிருப்புகள் தொழில் மையங்கள், விவசாயங்கள் பெரிய பாதிப்பு இல்லாமல் காக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இயற்கையின் சீற்றத்தால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மீறி பாதிப்புகள் ஏற்பட்டால், உடன் பாதிப்புகளை கணக்கிட்டு, மக்களின் துயரைத் துடைக்கும் வகையில், நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நன்னிலம் சுற்று வட்டார பகுதி கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில், பாதிப்புகளை எதுவும் சந்திக்காமல், இருப்பதற்கு தமிழக அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணம் என, நன்னிலம் பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: