2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டி: தேர்தல் ஆணையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் டிரம்ப்

வாஷிங்டன்: 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது போட்டியை உறுதி செய்துள்ளார் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் எதிர்வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடியரசுக்கட்சி சார்பில் தான் தேர்தலில் களமிறங்க உள்ளதாக புளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றும் விதமாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போவதாக கூறியுள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் பெரும்பான்மை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதிநிதிகள் சபையில் 217 இடங்களை டிரம்பின் குடியரசு கைப்பற்றி ஏறக்குறைய தன்வசப்படுத்தி இருக்கிறது. மேலவையான சென் சபையிலும் அக்கட்சி சம வளத்தை பிடித்துள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியின் பின்னடைவை தனக்கு சாதகமாக மற்றும் முயற்சியில் டிரம்பின் குடியரசு கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதையடுத்து 2024-ம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ள டிரம்ப் வேட்பு மனுவை அமெரிக்க தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.    

Related Stories: