மீண்டும் இந்திய அணியில் களமிறங்கும் எம்.எஸ்.தோனி?... பிசிசிஐ அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை டி20 போட்டிகளில் மட்டும் மீண்டும் களமிறக்கலாமா என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி அரையிறுதி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்வி பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானது. இது தொடர்பாக இந்திய அணியிடம் பிசிசிஐ அண்மையில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், தோனியை இந்திய அணியில் மீண்டும் இடம்பெறச்செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அணியில் ஆலோசகர் பதவி அல்லது முக்கிய வேறு பதவி ஏதும் தோனிக்கு கொடுக்கபடலாம் என கூறப்படுகிறது. அதேநேரம் தோனியை 20 ஓவர் போட்டிகளில் மட்டும் மீண்டும் களமிறக்கலாமா என பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து தோனியிடம் பேசப்பட்டதா? அவரின் முடிவு என்ன என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஒருவேளை தோனி மீண்டும் இந்திய அணிக்காக டி20 போட்டியில் விளையாட இறங்கினால் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 2011 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி என மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: