ஆன்லைனில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் விற்பனை செய்வது போல 1000 பேரிடம் ரூ.5 கோடி மோசடி: 20 பேர் கைது

பெங்களூரு: ஆன்லைனில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் விற்பனை செய்வது போல 1000 பேரிடம் மோசடி செய்து சுமார் ரூ.5 கோடி ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த 2 பேர் ஓலா நிறுவனத்தின் இணைய பக்கம் போலவே போலியாக ஒரு இணையதள பக்கத்தை வடிவமைத்துள்ளனர். அதில் யாரவது ஸ்கூட்டர் முன்பதிவு செய்தால் அந்த நபரின் செல் போன் எண் மற்றும் தகவல்களை வெளி மாநிலங்களில் உள்ள தங்களது குழுவினருக்கு பகிர்ந்துள்ளார்.

இணையப்பக்கத்தை அணுகிய நபர்களுக்கு பீகார் மற்றும் தெலுங்கானாவில் இருந்து தொடர்பு கொண்ட மோசடி கும்பல் முதலில் புக்கிங் செய்ய ரூ.499 அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். மேலும் காப்பீடு மற்றும் ஸ்கூட்டரை அனுப்பி வைப்பதற்கான போக்குவரத்து செலவு ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை கேட்டுள்ளார். ஓலா ஸ்கூட்டரை வாங்குவதற்கு ஒரே வலி இதுதான் என்றும், மோசடி கும்பல் நம்பவைத்துள்ளது. இதில் சந்தேகமடைந்த ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூர், குருக்ரம், பாட்னா உள்ளிட்ட இடங்களில் ஒருமாதமாக சோதனை நடத்திய போலீசார் 20 பேரை கைது செய்துள்ளனர். மோசடி கும்பல் சுமார் 1000 பேரை ஏமாற்றி ரூ.5 கோடி வசூல் செய்திருபப்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் எள்ளலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்திருப்பதால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: