கேரளாவில் அதிக நாள் முதல்வர் பினராய் சாதனை

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அதிக நாள் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை பினராய் விஜயன் படைத்துள்ளார். கேரளாவில் 2021ம் ஆண்டுக்கு முன்பு வரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறுவது வழக்கமாக இருந்தது. இதை இடதுசாரி கூட்டணி முதல்வர் பினராய் விஜயன் மாற்றி அமைத்தார். கடந்த 2016ம் ஆண்டில் அவரது தலைமையில் வெற்றி பெற்ற இடதுசாரி கூட்டணி, 2021ல் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. இந்தநிலையில் பினராய் விஜயன் புதிய சாதனையை படைத்துள்ளார். கேரளாவில் இதுவரை அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் அச்சுதமேனன் மட்டுமே. இவர் கடந்த 1970 அக்டோபர் 4ம் தேதி முதல் 1977 மார்ச் 25ம் தேதி வரை தொடர்ந்து 2,364 நாட்கள் முதல்வராக இருந்தார். தற்போது இந்த சாதனையை பினராய் விஜயன் முறியடித்துள்ளார். முதல்வராக பதவியேற்று நேற்றுடன் 2,364 நாட்கள் நிறைவடைந்து உள்ளன. இதையடுத்து கேரளாவில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை பினராய் விஜயனுக்கு கிடைத்துள்ளது.

Related Stories: