தேர்தல் ஆணைய சுதந்திரம் சீர்குலைப்பு; பாஜ சொன்னால்தான் காஷ்மீரில் தேர்தல்: மெகபூபா குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தேர்தல் ஆணையம் பாஜவின் நீட்சியாக மாறிவிட்டது. பாஜ எதைச் செய்யச் சொல்கிறதோ அதைச் செய்யும். தேர்தல் ஆணையம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் சுதந்திர அமைப்பு இல்லாத அளவிற்கு சீர்குலைக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில், பாஜ தலைமை மத அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் செய்தது. முஸ்லிம்கள் பகிரங்கமாக அச்சுறுத்தப்படுகிறார்கள்.

ஆனால் தேர்தல் ஆணையம் மவுனப் பார்வையாளராகவே உள்ளது. காஷ்மீரில், பாஜ கூறும்போது ஆணையம் தேர்தலை அறிவிக்கும். ஆட்சிப் பிரச்னையில், தற்போதைய அரசு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுவதில் குறியாக உள்ளது. காஷ்மீரில் நிலைமை சீராகும் வரை தங்களை ஜம்முவிற்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக காஷ்மீரி பண்டிட்டுகளின் வலியை மட்டுமே பாஜ பயன்படுத்திக் கொள்கிறது’’ என்றார்.

Related Stories: