புதுடெல்லி3: ‘டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் நேருக்கு நேர் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தயார்’ என பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சவால் விடுத்துள்ளார். இரட்டை இலை சின்னம் பெற்றுத் தர லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டவரும், பிரபல மோசடி மன்னனுமான சுகேஷ் சந்திரசேகர், ‘ஆத் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனக்கு எம்பி சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.50 கோடி பெற்றார். அக்கட்சியினர் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் ரூ.500 கோடி தேர்தல் நிதி திரட்ட கூறினார்’ என்று அடுத்தடுத்து ஆளுநருக்கும், ஊடகங்களுக்கும் கடிதங்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.