அய்யலூர் அருகே தீத்தாகிழவனூரில் ஏர்கன் வைத்திருந்த வாலிபரை எச்சரித்த போலீசார்-தோட்டாக்கள் பறிமுதல்

வடமதுரை : அய்யலூர் அருகே தீத்தாகிழவனூரில் வாலிபரிடமிருந்து ஏர்கன் மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அய்யலூர் அருகே தீத்தாகிழவனூரைச் சேர்ந்தவர் செம்பன் மகன் பழனிச்சாமி (35). இவர் தோட்டத்தில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பழனிச்சாமி தோட்டத்தில் ஏர்கன்னும் மற்றும் சுடுவதற்கு பயன்படுத்தப்படும் பரல்கள் வடிவிலான தோட்டாக்களும் இருந்தது. பொதுவாக ஏர்கன் என்பது யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்றபோதும், பரல்கள் வகை தோட்டாக்களை எதற்காக பழனிச்சாமி வைத்திருந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். இதனையடுத்து ஏர்கன்னையும், தோட்டாக்களையும் சீலப்பாடி ஆயுதப்படை போலீஸ் பிரிவுக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பழனிச்சாமியிடம் தீவிர விசாரணை நடத்தி துப்பாக்கியை சோதித்துப் பார்த்ததில் இது ஏர்கன் என தெரியவந்தது.

மேலும் பழனிச்சாமியை போலீசார் இது போன்ற ஏர்கன் துப்பாக்கிகளை பொது இடங்களிலும், பொதுநிகழ்ச்சி நடக்கும் இடங்களிலும் பயன்படுத்த கூடாது என்று எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கியை பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.

Related Stories: