கனிம வளங்களை கொள்ளையடிக்கும் செல்வாக்கான நபர்களை கடுமையாக கையாள வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: அரசின் சொத்துக்களான கனிம வளங்களை உரிமம் இல்லாமல் கொள்ளையடிப்பவர்களை கடுமையாக கையாள வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை வக்கீல் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  அரசின் சொத்துக்களான கனிம வளங்களை சட்டவிரோதமாக கொள்ளையடிக்கும் செல்வாக்கான நபர்களை அரசு, கடுமையாக கையாள வேண்டும். உரிமம் இல்லாமல் கனிம வளங்கள் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக  எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என கூறி் விசாரணையை ஜூன் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

The post கனிம வளங்களை கொள்ளையடிக்கும் செல்வாக்கான நபர்களை கடுமையாக கையாள வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: