வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து சுவாதீனம் பெறப்பட்டது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூபாய். ஒரு கோடி மதிப்பிலான சொத்து சுவாதீனம் பெறப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி, இன்று (08.11.2022) நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், அருள்மிகு வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூபாய். ஒரு கோடி மதிப்பிலான சொத்து திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், தெற்கு வீதியில் அருள்மிகு வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 18 சென்ட் மனையில் அமைந்துள்ள பழைய ஓட்டு கட்டிடம் திரு.ராமையன் செட்டியார் அவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

இக்கட்டிடத்திற்கு நீண்ட காலமாக   வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கு விடப்பட்டிருந்ததாலும் நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் அவர்களின் சட்டபிரிவு -  79 B ன் உத்தரவின்படி வருவாய் மற்றும் காவல் துறையினர் உதவியோடு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய். ஒரு கோடி ஆகும். இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை நாகப்பட்டினம் உதவி ஆணையர் திருமதி பி.ராணி, வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) திருமதி அமுதா, திருக்கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) திரு.எஸ்.கவியரசு, ஆய்வாளர் திரு.ராமதாஸ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: