சமபலம் வாய்ந்த இந்தியா , இங்கிலாந்து அணிகள் நாளை மறுநாள் அரையிறுதியில் மோதல்

அடிலெய்டு: முதலாவது அரையிறுதி ஆட்டத்தை காட்டிலும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஆட்டத்தைக் காட்டிலும் ஆட்டத்தின் மீதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குரூப் 2-வில் இடம்பிடித்திருக்கும் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவைத் தவிர மற்ற நான்கு அணிகளையும் லீக் சுற்றில் வீழ்த்தி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்நிலையில் குரூப் 1-ம் இரண்டாம் இடத்தைப் பிடித்த இங்கிலாந்துடன் நாளை மறுநாள் அடிலெய்டில் இந்திய அணி கோதாவில் குதிக்கிறது.

இதற்காக வீரர்கள் கடந்த 2 நாட்களாக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் ஜெயம் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது. ஆனால் புள்ளி விவரங்கள் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகம் எனத் தெரிவிக்கின்றன. இதனிடையே நேற்றைய பயிற்சியின் போது இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வலது கையில் காயம் அடைந்தது அணிக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதைபோன்று இங்கிலாந்து அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் மலான் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மலான் காயம் அடைந்ததால் சக வீரர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனிடையே சிட்னியில் நாளை நடக்கும் முதலாவது அரையிறுதியில் பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்த்து பாகிஸ்தான் களமிறங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து போன்று இந்த இரு அணிகளும் சமபலத்துடன் காணப்படுவதால் வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

ஆனால் புள்ளி கணக்குகள் பாகிஸ்தானை காட்டிலும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்துக்கே வெற்றிவாய்ப்பு சற்று அதிகம் என்று தெரிவிக்கின்றன. இதனிடையே இந்தியா, பாகிஸ்தான் அணிகளே இறுதிச் சுற்றில் மோதுவதை ரசிகர்கள் விரும்புவதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். பாகிஸ்தான் வீரர் அக்தரும் இந்த கருத்தை ஆமோதித்துள்ளார்.

Related Stories: