கெங்கவல்லி: சேலம் மாவட்டம், வீரகனூர் ஏரியில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் புகுந்து மதகை உடைத்து இரும்பு ராடுகளை திருடிச்சென்றுள்ளனர். இரும்பு ராடுகளை திருடிச் சென்று விட்டதால், ஏரிக்கு நீர் வரும் போது, அவை ஏரி வாய்க்கால் வழியாக சென்று விவசாய நிலங்களில் பாய்கிறது. இதனால் பயிர்கள் அழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரி நீர் வீணாக ஆற்றில் சென்று கலக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
