பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்மழையால் 12 ஏரிகள் முழுவதும் நிரம்பியது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் 12 ஏரிகள் நிரம்பியது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைக்காக 1,500 மணல் மூட்டைகள், 3,500 சாக்குகள், சவுக்கு கழிகள் தயார் நிலையில் உள்ளதாக நீர்வள ஆதாரத்துறை உதவிசெயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் மற்றும் விசுவக்குடி, கொட்டரை என 2 அணைக்கட்டுகள் உள்ளன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது.

இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழைபெய்து வருவதால் நீர்வள ஆதாரேஅமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் அரும்பாவூர் பெரிய ஏரி, வடக்கலூர் ஏரி, லாடபு ரம் பெரிய ஏரி, நூத்தப்பூர் ஏரி, வடக்கலூர் அக்ரஹாரம்ஏரி, வெண்பாவூர் ஏரி, வெங்கலம் சின்னஏரி, கீர வாடி ஏரி, அகரம் சீகூர் ஏரி, ஒகளூர் ஏரி, குரும்பலூர்ஏரி, அரும்பாவூர் சின்ன ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி ஆகிய 13 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி வழிகின்றன. கீழப்பெரம்பலூர் ஏரி, செஞ்சேரி ஏரி, கிழுமத்தூர் ஏரி ஆகிய மூன்று ஏரிகளும் 90 முதல் 99 சதவீதத்திற்கு நிரம்பியுள்ளது.

பெரம்பலூர் கீழஏரி, ஆய்க்குடி ஏரி, வயலூர் ஏரி, பூலாம்பாடி பொன்னேரி, கை.பெரம்ப லூர் ஏரி ஆகியன 81 சதவீ தம் முதல் 90 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. பெரம்பலூர் மேலஏரி, பாண்டகப்பாடி ஏரி, துறைமங்கலம் சின்ன ஏரிஆகியன 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. கிளியூர்ஏரி, பெரியம்மாபாளையம் ஏரி, பெருமத்தூர் ஏரி, பெ ண்ணக் கோணம் ஏரி, ஆண்டி குரும்பலூர் ஏரி, பேரையூர் ஏரி, அரணாரை ஏரி, வெங்கலம் பெரிய ஏரி ஆகியன 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

எழுமூர் ஏரி, செங்குணம் ஏரி, வி.களத்தூர் சின்னஏரி, வெங்கனூர் ஏரி, தொ ண்டமாந்துறை ஏரி, நெற்கு ணம் ஏரி, மேலப்புலியூர் ஏரி, லாடபுரம் சின்னஏரி, காரை பெரிய ஏரி, நாரணமங்கலம் ஏரி, வரகுபாடி ஏரி, அரசலூர் ஏரி, வி.களத்தூர் பெரியஏரி, கீரனூர் ஏரி, அத்தியூர்ஏரி, கீழப்புலியூர் ஏரி, பூலாம்பாடி சின்னஏரி ஆகியன 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நிரம்பியு ள்ளன. கை.களத்தூர் ஏரி, பில்லாங்குளம் ஏரி, பொம் மனப்பாடி ஏரி, காரை சின் ன ஏரி உள்ளிட்ட 24 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழாகவே நிரம்பி உள்ளன.

ஆலத்தூர் தாலுக்காவில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தக்கம் தனது முழு கொள்ளளவான 212. 47 மில்லியன் கனஅடிஅளவை 100 சதவீ தம் எட்டியதால் நிரம்பி வழிகிறது. வேப்பந்தட்டை தாலுக்காவில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்ட விசுவக்குடி அணைக்கட்டில் தற்போது ரேடியல் ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. 10.30 மீட்டர் உயரமுள்ள இந்த அணைக்கட்டில் தற்போது 7.90 மீட்டர் தண் ணீர் உள்ளது. அதாவது 43.42 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கட்டில், 24.59 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.

Related Stories: