கோஹ்லி போலி பீல்டிங்கா? ஹர்ஷா போக்லே பதிலடி

மும்பை: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோஹ்லி போலி பீல்டிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதற்கு கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: போலியாக கோஹ்லி பீல்டிங் செய்தார் என்று முன் வைத்திருக்கும் விமர்சனத்திற்கு நான் இங்கே பதில் கூற விரும்புகிறேன். உண்மையில் அவர் அப்படி செய்ததை பேட்ஸ்மேன்கள் மற்றும் நடுவர்கள் அப்போது பார்க்கவில்லை. பார்த்திருந்தால் களத்தில் இருக்கும் பொழுதே கேட்டிருப்பார்கள்.

ஐசிசி வகுத்திருக்கும் விதிமுறையில் போலியான பீல்டிங் தவறு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் போட்டி நடக்கும் பொழுது நடுவர்கள் அதில் தலையிட்டு ஐந்து ரன்கள் கொடுத்திருக்க வேண்டும். உண்மையில் யாரும் பார்க்கவில்லை. போட்டியில் வங்கதேசத்தினர் தோல்வி அடைந்துவிட்டனர். ஆகையால் அதற்கு காரணங்களை தேடி வருகின்றனர். போலியான பீல்டிங் மற்றும் மைதானத்தின் ஈரப்பதம் இரண்டும் காரணமாக கிடைத்திருக்கிறது, என்றார்.

Related Stories: