சத்தீஸ்கரில் களைகட்டிய தேசிய பழங்குடியினர் நடன விழாவில் சத்தீஸ்கர், ஜார்கண்ட் முதல்வர்கள் பங்கேற்பு

சத்தீஸ்கர்: பழங்குடியினத்தில் கலாச்சாரம் கலைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேசிய நடன விழா நடைபெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மௌஸீமி, மங்கோலியா, டேங்கோ, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்குடி நடன குழுக்கள் ராய்ப்பூரில் நடைபெற்ற பழங்குடின திருவிழாவிற்கு வருகை தந்தது. சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடி குழுவினர் சிறப்பாக நடனம் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

மஹாராஷ்டிராவை சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில் சிறுவர்கள் பங்கேற்று நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நேற்று நடைபெற்ற இறுதி நாள் விழாவில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்து கொண்டு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கின. தேர்வு குழுவினர் தேர்ந்தெடுத்த சிறந்த நடன குழுவினருக்கு முதல் பரிசாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 

Related Stories: