சதயவிழாவை முன்னிட்டு கோலத்தில் ராஜராஜசோழன் உருவம் வரைந்து மாணவிகள் அசத்தல்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாமன்னர் ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் கோலமாவு கொண்டு ராஜராஜசோழன் உருவம் வரைந்து அசத்தினர். தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் 1037வது சதயவிழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ,  மாணவிகள் நேற்று ராஜராஜசோழனின் திருவுருவத்தை பல வண்ண பூக்கள் மற்றும் கலர் கோல மாவு கொண்டும் அழகாக வரைந்து ராஜராஜசோழனை போற்றி பாடலைப்பாடி ஆடினர்.

இந்நிகழ்ச்சி பல்வேறு கோயில்களை கட்டி உள்ள ராஜராஜசோழனின் பெருமையை மாணவர்கள் உணரும் வண்ணமும், சிற்ப கலையை மாணவர்கள் உணரும் விதமாகவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ மாணவியர்vகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: