சுரங்க ஒதுக்கீடு முறைகேடு ஜார்கண்ட் முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: இன்று ஆஜராக உத்தரவு

புதுடெல்லி:  ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சாகிப்கஞ்ச், பர்ஹைத், ராஜ்மகால், மிர்சா, சவுகி மற்றும் பர்ஹர்வா ஆகிய இடங்களில் இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் இரண்டு பேர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வியாழன்று(இன்று) ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரனின் விசாரணை நடவடிக்கை முழுவதையும் பதிவு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: