இன்று கல்லறை தினம் அனுசரிப்பு டி.பி சத்திரம், கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் போலீசார் பாதுகாப்பு

அண்ணாநகர்: கல்லறை தினத்தை முன்னிட்டு கீழ்பாக்கம், டி.பி.சத்திரம் கல்லறை தோட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் இன்று நவம்பர் 2ம் தேதி கல்லறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்று அங்குள்ள அவர்களது கல்லறையில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவார்கள்.

இதன்படி இன்று சென்னையில் உள்ள கல்லறை தோட்டங்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். டி.பி சத்திரம், கீழ்ப்பாக்கம் ஆகிய இரண்டு கல்லறை தோட்டங்களில் இன்று மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை முதல் மாலை வரை குடும்பம் குடும்பமாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவார்கள்.

தேவாலயங்களிலும்  கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாற திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கீழ்ப்பாக்கம் போலீஸ் உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் சக்தி வேலாயுதம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

உதவி ஆணையர் ரமேஷ் கூறுகையில், ‘‘கீழ்ப்பாக்கம், டி.பி சத்திரம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களின் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் வருவார்கள். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்சம்பவங்கள் நடைபெறும். எனவே, இவற்ைற தடுப்பதற்கும் மக்களின் பாதுகாப்புக்காகவும் போலீசார் சுழற்சி முறையில் மாறுவேறுடத்தில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’ என்றார்.

Related Stories: