பெருவில் நடந்த செல்லப் பிராணிகளுக்கான ஹாலோவீன் விழா: நூற்றுக்கணக்கான நாய்கள் மற்றும் பூனைகள் பங்கேற்பு

பெரு: ஹாலோவீன் திகில் தினத்தை முன்னிட்டு பெருவில் நடத்தப்பட்ட வீட்டு வளர்ப்பு விலங்களுக்கு நடத்தப்பட்ட மாறுவேட போட்டியில் ஏராளமான நாய்களும், பூனைகளும் பங்கேற்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஹாலோவீன் தினம் ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டு ஹாலோவீன் தினத்தை முன்னிட்டு பெருவின் லிமா நகரத்தில் செல்லப் பிராணிகளுக்கான ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட நாய்கள், பூனைகள் கலந்து கொண்டன.

வித்யாசமான ஆடை, அணிகலன்களால் தங்கள் செல்லப் பிராணிகளை அலங்கரித்த மக்கள் அவற்றை போட்டியில் பங்கேற்க செய்தனர். ஹாலோவீன் தினத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட அலங்கார போட்டியில் மிமி என்று பெயரிடப்பட்ட நாய் முதல் இடத்தை பிடித்தது. வீட்டில் பிராணிகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இப்போட்டி நடத்தப்படுகிறது.   

Related Stories: