சிறிய பிரச்னையை கூட பெரிதாக்கும் அண்ணாமலை குஜராத் பாலம் விபத்தில் பதில் சொல்ல மறுப்பது ஏன்? தேர்தல் அவசரத்தில் பாஜ அரசு அப்பாவி உயிர்களை காவு வாங்கி விட்டது; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: சிறிய பிரச்னையை கூட ஊதி, ஊதி பெரிதாக்குவதில் வல்லவரான தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, உலகையே உலுக்கிய குஜராத் பாலம் விபத்தில் பதில் சொல்ல மறுப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் சிதலமடைந்தது. சீரமைப்புக்கு பின்னர், கடந்த 26ம் தேதி திறக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று முன்தினம் அந்த பாலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டனர். மாலை 6.30 மணி அளவில் பாலம் திடீரென அறுந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் சுமார் 134 பேர் பலியாகினர். விடுமுறை தினத்தில் இந்த கோர சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கு முழுக்க, முழுக்க குஜராத்தில் ஆளும் பாஜ அரசு  தான் காரணம் என்று குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இவ்வளவு பெரிய விபத்து குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக தனது வருத்தத்தை தெரிவித்தார். இதே போல தமிழகத்தில் உள்ள பல தலைவர்கள் விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சின்ன பிரச்னை என்றாலும் மாநில அரசு பதவி விலக வேண்டும் என்று கூறி வரும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குஜராத்தில் இவ்வளவு பேர் இறப்புக்கு எந்த பதிலும் இதுவரை கூறாதது முகம் சுளிக்க வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: குஜராத்தில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் ரொம்ப பழையது. இப்போது தான் ரிப்பேர் செய்து திறந்து இருக்கிறார்கள். இந்த கோர விபத்தின் மூலம் அதனை ஒழுங்காக ரிப்பேர் செய்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மோடி இன்று(நேற்று) குஜராத்தில் தேர்தலை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அறிவிப்பதற்காக போவதாக இருந்தது. தேர்தல் தயாரிப்புக்காக இப்படி அவசர கதியில் திறந்தார்களா என்பது தெரியவில்லை. இவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவசர கதியில் திறந்ததால் தான் இந்த விபத்துக்கு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

இல்லையென்றால் ரிப்பேர் செய்து 3 நாட்களில் எப்படி விபத்து ஏற்பட்டு இருக்கும். என்ன ரிப்பேர் செய்தார்கள். ரிப்பேர் என்ற பெயரில் அவசரத்தில் ஏதாவது பண்ணினார்களா. இதற்கு பிரதமர் மோடியும், ஆளும் குஜராத் பாஜ அரசும் தான் பதில் சொல்ல வேண்டும். ெவறும் விபத்து என்று இதனை பார்க்க முடியாது. இது இவர்களின் கவனக்குறைவு தான். தேர்தலுக்கு இதை பயன்படுத்த வேண்டும் என்ற அவசரத்தில் செய்ததன் விளைவு தான் இந்த விபத்து. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூபாய் மதிப்பு குறைந்து போனதுக்கு, ரூபாயின் மதிப்பு குறையவில்லை. டாலரின் மதிப்பு உயர்ந்து போச்சு என்று சொன்னார். அந்த மாதிரி ஏதாவது அண்ணாமலை சொல்வார்.

இதற்கு எல்லாம் அண்ணாமலை கவலைப்படுகிற ஆளே கிடையாது. அப்பாவி மக்கள்134 பேர் இறந்து இருக்கிறார்கள். இன்னும் ரொம்ப வந்து கிட்டே இருக்கும் என்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டியது தானே. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் நடக்கும் சம்பவத்திற்கு ஏதோ பேசி வருகிறார். பாஜ ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போச்சா அவருக்கு. குஜராத் சம்பவத்தில் பாஜவின் லட்சணம் புரிந்து போய் விட்டது. இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்ல போகிறார். ஏன் இன்னும் வாயை திறக்க மறுக்கிறார். அண்ணாமலை பாஜ ஆளும் மாநிலங்கள் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்கிற மாதிரியும்.

எதிர்க்கட்சி ஆளுங்கின்ற தமிழகமும், கேரளாவும் ரொம்ப மோசமாக இருக்கிற மாதிரியும் பேசி வருகிறார். சில இடங்களில் சிறிய பிரச்னைகளை கூட பெரிதாக்கி கொண்டிருப்பவர் அண்ணாமலை. அப்படியிருக்கும் அவர் உலகத்தையை உலுக்கி கொண்டிருக்கும் குஜராத் விபத்து குறித்து எதுவும் பதில் சொல்ல மறுக்கிறார். பாஜ ஆளும் மாநிலம் ரொம்ப மோசமாக இருப்பதற்கு இது ஒரு உதாரணம் தான. இதை விட மோசமான அரசு எந்த அரசு இருக்க முடியும். இதற்கு பாஜ அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். பாஜ ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போச்சா அவருக்கு. குஜராத் சம்பவத்தில் பாஜவின் லட்சணம் புரிந்து போய் விட்டது. இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்ல போகிறார். ஏன் இன்னும் வாயை திறக்க மறுக்கிறார்.

Related Stories: